சினிமா நடிகர்களை தவிர கட்சி பாகுபாடின்றி நல்லவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்வேன் - டிராபிக் ராமசாமி

கோவை: சினிமா நடிகர்களை தவிர கட்சிப்பாகுபாடின்றி நல்லவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்வேன் என கோவையில் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.



கோவை: சினிமா நடிகர்களை தவிர கட்சிப்பாகுபாடின்றி நல்லவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்வேன் என கோவையில் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.



நல்லாட்சி இயக்கம் சார்பில் வாக்காளர்களை சந்தித்து டிராபிக் ராமசாமி ஆதரவு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி வருகிறார்.



இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசிலிங்கம் கல்லூரி சாலை பகுதியில் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நல்லாட்சி இயக்கம் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், ஒரு கோடி மக்களை சந்தித்துள்ளதாகவும், இன்று முதல் கோவையிலிருந்து பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் இனி சூரியன், இரட்டை இலை, தாமரை மறுத்து நல்லவர்களுக்கு வாக்களித்தால் மக்களுக்கு நல்லது எனவும் ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிக்காமல், சுயேட்சையாக போட்டியிடும் நல்லவர்களை பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கம் சார்பில் நல்ல வாக்காளர்கள் நிறுத்தப்படுவார்கள் என கூறிய டிராபிக் ராமசாமி, அதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கமாக மக்களாட்சி அமையும் எனவும் நல்லவர்கள் ஆட்சி செய்யும் நாள் விரைவில் ஏற்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

அதேபோல, தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் கையில்தான் உள்ளது எனவும் வீண் செலவுகள் குறைக்கப்படும் என உறுதியளிப்பதாகவும் தன்னால் கைகாட்டப்படும் வேட்பாளர்கள் மக்களின் வாக்குக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த அவர், பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் இனியும் தொடர்ந்து போராடுவேன் என்றவர், சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கிறது என்று தெரிவித்தார்.

அதேபோல, சினிமா நடிகர்களை தவிர கட்சி பாகுபாடின்றி நல்லவர்கள் யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறிய அவர், இதுவரை சினிமாக்காரர்களை நம்பி மக்கள் ஏமாந்தது போதும் எனவும் நடிகர்களால் நாட்டை காப்பாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...