கோவையில் அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் 45 நாட்களே ஆன குழந்தை பலி - சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை!

கோவை: கோவை கோவில் பாளையம் அருகே அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் 45 நாட்களே ஆன குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கோவில் பாளையம் அருகே அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் 45 நாட்களே ஆன குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னையன்(27). இவரது மனைவி சத்யா(24). இத்தம்பதியினருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு திகழ்விழி என்ற 45 நாட்களே ஆன பெண் குழந்தை உள்ளது. கோவை அடுத்த குரும்பம்பாளையம் இ.பி.காலணி பகுதியில் வசித்து வரும் சின்னையன் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சின்னையன் தனது மனைவியுடன் குழந்தை திகள்விழிக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, கோவில்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, கோவில்பாளையம் அருகே சென்ற போது அவர்களுக்கு பின்னால் வந்த ஸ்கார்பியோ கார் அதிவேகமாக வந்து, சின்னையன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன் நிற்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் சென்றது. இதில் சின்னையன் தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, சத்யாவின் கையில் இருந்த குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சின்னையன் தம்பதியினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், குழந்தை திகழ்விழி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், இதுகுறித்து சின்னையன் அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து அதில் பதிவான கார் எண்ணை வைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...