ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நலவாழ்வு திட்டம்: 489 கிராம மக்கள் இரத்த சோகை நோயிலிருந்து மீண்டுள்ளனர்

சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அந்நோயில் இருந்து மீட்டெடுப்பது பிரதான பணியாக மேற்கொள்ளப்பட்டது.

சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அந்நோயில் இருந்து மீட்டெடுப்பது பிரதான பணியாக மேற்கொள்ளப்பட்டது.

கோவை: ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் வழங்கிய இலவச மருத்துவ சேவையின் மூலமாக விவசாய கூலி தொழிலாளிகள், மலைவாழ் மக்கள், பெண்கள் உட்பட 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளனர், என ஈஷா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அந்நோயில் இருந்து மீட்டெடுப்பது பிரதான பணியாக மேற்கொள்ளப்பட்டது.

"கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் பல ஆண்டுகளாக பல்வேறு விதமான சேவைகளை செய்து வருகிறது. 

ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நலவாழ்வு திட்டம்

இதன் ஒரு அம்சமாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இக்கரைப் போளூவாம்பட்டி, நரசீபுரம், தேவராயபுரம், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமப் பஞ்சாயத்துக்களில் ’ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நலவாழ்வு திட்டம்’ என்ற பெயரில் ஒரு மருத்துவ திட்டத்தை 2017-ம் ஆண்டு தொடங்கியது. 



சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை, அந்நோயில் இருந்து மீட்டெடுப்பது பிரதான பணியாக மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஈஷா தன்னார்வலர்களின் உதவியுடன் 49 கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்த சோகை கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, 10 முதல் 19 வயது வரையிலான பதின் பருவ ஆண்களுக்கும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. 



இந்தப் பரிசோதனை முடிவுகளின்படி, 654 பேருக்கு ரத்த சோகை இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த பாரம்பரிய மருந்துகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், ஒரு மண்டலத்துக்கு ஒரு முறை (48 நாட்கள்) அவர்களின் ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டது. தொடர்ச்சியான, கண்காணிப்பு மற்றும் களப்பணியின் விளைவாக, 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

அதாவது, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 75 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இது ஆயுஷ் அமைச்சகத்தின் 70 சதவீத இலக்கை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், ஆட்டோக்களில் சென்றும், வீடு வீடாக சென்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடிந்தது.

ரத்த சோகை தவிர்த்து காய்ச்சல், தலைவலி, கை, கால் மற்றும் மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சினைகள், வயிறு தொடர்பான கோளாறுகள் போன்றவற்றை தீர்ப்பதற்காக 20 கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ’ஆயுஷ் சேவக்’ என்ற பெயரில் ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டார். அவர் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு ஏற்ப பாரம்பரிய மருந்துகளை வழங்குவார். இப்பணியின் மூலம் சுமார் 22 ஆயிரம் பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.



மேலும், இத்திட்டத்தின் கீழ் உடல்நல குறைபாடுகள் வராமல் தடுக்கும் விதமாக பள்ளி குழந்தைகள், மகளிர் உட்பட 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக யோகாவும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இத்திட்டம், வெற்றி பெற்றதை தொடர்ந்து 10 கிராமப் பஞ்சாயத்துக்களிலும் கடந்த ஒரு வாரமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ரத்த சோகையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்", என ஈஷாவின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...