பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர் - பாஜக மாநில இளைஞரணி தலைவர் திருப்பூரில் பேட்டி

திருப்பூர்: பாஜக அதிமுக கூட்டணி தொடரும் 2021ல் பாஜக அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும், இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர், என மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் திருப்பூரில் பேட்டியளித்துள்ளார்.


திருப்பூர்: பாஜக அதிமுக கூட்டணி தொடரும் 2021ல் பாஜக அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும், இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர், என மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் திருப்பூரில் பேட்டியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயற்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது எனவும், நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் மாநிலத் தலைவர் எல் முருகனின், வெற்றிவேல் வீரவேல் யாத்திரை தொடர்பாக விவாதிக்ப்பட்டு அதற்கு செய்ய வேண்டிய வேலைகள் நடைபெற்று வருவதாக, தெரிவித்தார்.

மேலும், தேர்தல் களம் 2021ல் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மக்களிடையே மோடி அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

கடந்த சில மாதங்களாக, எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவு இளைஞர்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது என்றும், குறிப்பாக, திருப்பூர் பகுதியில் பல்லாயிரம் இளைஞர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதன் மூலம், வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், மாநிலத் தலைவர் தெளிவாக கூறியபடி, பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்றும் 2021ல் பாஜக அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர், என்று தெரிவித்தார்.

"அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவெடுப்பது அது அவர்களை கட்சியினுடைய விவகாரம், இதில் பாஜக கருத்து சொல்ல எதுவும் இல்லை. தமிழக மக்களுக்கு நலன் சேர்க்கும் கூட்டணியாக, பாஜக இடம்பெற்று இந்த தேர்தலை எதிர்கொள்வோம்", என்றார்.

மேலும், விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே, போராட்டம் தூண்டி விடப்படுகிறது. இந்த சட்ட மசோதா ஏற்கனவே, திமுக 2014 தேர்தல் அறிக்கையாக கொடுத்த வாக்குறுதியை தான் பாஜக அரசு தற்போது விவசாய சட்டத்திருத்த மசோதாவில் நிறைவேற்றியுள்ளது, என்றார்.

கடந்த காலங்களில், அதிமுகவில் இருந்து வெளியே வருபவர்கள் திமுகவையும், திமுக வில் இருந்து வெளியே வருபவர்கள் அதிமுகவில் இணைந்து வந்தனர், ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாக திமுக, அதிமுக என எந்த கட்சியில் இருந்து வெளியேறும் நபர்கள் அனைவரும் தற்போது பாஜக வை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் செயல்பாடுகள் திட்டங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, இந்த தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...