கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எரிந்த நபர் - வைரலாகும் வீடியோ!

கோவை: கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எரிந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எரிந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் தேர்முட்டி பகுதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுவற்றில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஆபாசமான வகையில் இருந்த அந்த போஸ்டர்களை கண்ட நகைக்கடை ஊழியர் தினேஷ் என்பவர் அவற்றை ஆவேசமாக கிழித்து எரிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் உருவாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்நிலையில், நேற்று டீசர் ஒன்று நேற்று வெளியானது.

அதில், ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட டீசராக அது அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட டீசரை வெளியிட்டதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.



இந்த நிலையில், திரைப்படம் குறித்து கோவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை நகை கடை ஊழியர் ஒருவர் கிழித்தெறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...