கோவை: யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒருமுறை முதுமலையில் உள்ள காட்டு யானைக்கு சிகிச்சை அளித்து இருந்தார். நன்றி தவறாமல் பல வருடங்களுக்கு பிறகு டாக்டர் கே வை சந்திக்க வால்பாறை வரை வந்துள்ளதாம்.
கோவை: யானை டாக்டர் கிருஷ்ண மூர்த்தி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒருமுறை முதுமலையில் உள்ள காட்டு யானைக்கு சிகிச்சை அளித்து இருந்தார். நன்றி தவறாமல் பல வருடங்களுக்கு பிறகு டாக்டர் கே வை சந்திக்க வால்பாறை வரை வந்துள்ளதாம். அதேபோல நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
காயம்பட்ட பறவைக்கு சிகிச்சை அளித்தவரை சந்திக்க அந்த பறவை அவருடைய வீட்டிற்கே வந்துள்ளது. கோவை பொன்னையாபுரத்தில் ஆந்தை ஒன்று அடிபட்டு விட்டதாகவும் அதை சுற்றி நாய்கள் வலம் வந்து கொண்டே இருப்பதாகவும், பறவைகள் மற்றும் வன உயிரிகள் மீட்பு பணி செய்து வரும் முகமத் சலீம் அவர்களுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
பறவை இருந்த இடத்திற்கு சென்றவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அடிபட்ட பறவை ஆந்தை இல்லை என்றும், அடர்ந்த காடுகளில் வசிக்கும் பாம்புண்ணிக் கொண்டைக் கழுகு (crested serpent eagle) என்று அடையலாம் காணப்பட்டது.
இது குறித்து அவரிடம் பேசிய போது, பாம்புண்ணிக் கொண்டைக் கழுகு (crested serpent eagle) பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஒரு பறவை இனம் ஆகும். மீட்பு பணிக்காக அழைப்பு வந்தவுடன் சென்று விட்டேன். அப்பறவையில் இறக்கைகளில் அடிப்பட்டு இருந்தது. முதலுதவி அளித்து காலையில் பறக்க விட முயற்சி செய்தோம். நன்றாகவே பறந்து சென்றது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் இன்று காலையில் எங்கள் வீட்டில் அருகில் உள்ள மரத்தில் அப்பறவை அமர்ந்து இருப்பது ஆச்சரியம் அளித்தவையாக இருந்தது.
இந்தியாவில் பல இடங்களில் பரவி வாழ்கிறது. பாம்புகள் இதனுடைய பிரதான உணவுகளாகும். அடர்ந்த காடுகளிலும், நீர் சார்ந்த இடங்களில் வாழும் இவ்வகை பறவை நகர்ப்புறங்களில் காண்பது அரிதாகும். உணவு மற்றும் வாழ்விடங்கள் பிரச்சினையால் சில வன உயிரினங்கள் நகர்ப்புறங்களில் வருவது வாடிக்கையாக விட்டது.