உதகையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை - 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி!

நீலகிரி: உதகையில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.


நீலகிரி: உதகையில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்ததால் கந்தல், உதகை நகர் மற்றும் கிரீன்பீல்ட் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிரீன்ஃபீல்ட் பகுதியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நகராட்சி ஆணையாளருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நேற்று ஒரே இரவில் 60 மில்லி மீட்டர் மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பொருட்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், பல இடங்களில் முகாம்கள் தயார்நிலையில் உள்ளது. வெள்ளம் புக காரணமாக உள்ள கோடப்பமந்து கால்வாயை விரைவில் தூர் எடுக்கப்படும் என்றார். எனவே, அதிக மழை பெய்யும் காலங்களில் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...