கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த சில மாதங்களாக நகர் பகுதியில் உள்ள கடைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செல்வம், செந்தில்குமார் உள்ளிட்டோர், கடைவீதி மற்றும் இமாம்கான்வீதி, எஸ்.எஸ்.கோவில் வீதி உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில் கடைகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 15க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த சுமார் 115 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றின் அளவுக்கேற்ப அபராதம் என மொத்தம் ரூ.4500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பின் அவற்றை பறிமுதல் செய்வதோடு, கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.