பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் குடியிருப்பு பகுதி மாசுபடுவதாக பொதுமக்கள் புகார்..!

கோவை: பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் குடியிருப்பு பகுதி முழுவதும் மாசுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் குடியிருப்பு பகுதி முழுவதும் மாசுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம், அருட்செல்வர் நகரில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில், தென்னை நார் உற்பத்தி செய்த பிறகு, அதிலிருந்து வெளியேறும் தென்னைநார் துகள்களை அருகில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவில் இடத்தில் போடப்பட்டு, உலர வைக்கப்படுகிறது.

இந்நிலையில் உலர வைக்கப்படும் தென்னை நார் துகள்கள் காற்றில் பறந்து, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் படிந்து மாசு ஏற்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர்.



இதனால், பாத்திரங்கள், உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் பால் போன்ற பொருட்களில் தென்னை நார் துகள்கள் படிந்து வருவதால், சமைத்த உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். ஒரு சில நேரங்களில் காற்று அதிகமாக வீசும் போது, அதிகமாக வெளியேறும் நார் துகள்களால் மூச்சு திணறல் ஏற்படும் ஆபத்தும் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்

சாட்டுகின்றனர்.



மேலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளில் துகள்கள் படிந்து காணப்படுவதால், நாள்தோறும் துகள்களை சுத்தம் செய்யும் பணியிலேயே அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குடியிருப்பு பகுதியை மாசுபடுத்தும் இந்த நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...