உலக தபால் தினத்தை முன்னிட்டு, கோவையில் சிறப்பு தபால் உறை வெளியீடு

கோவை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவை ஆர். எஸ் புரத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு தபால் உறை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவை ஆர். எஸ் புரத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு தபால் உறை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு, மேற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குனர், ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பின்னர், புதிய தபால் தின உறையை வெளியிட்டப்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில், இந்திய அஞ்சல் துறை மருந்துகள் அடங்கிய பார்சல்களையும், முக்கிய தபால்களையும் தேவையானவர்களுக்கு வழங்கியது.

மேலும், முதியோர்களுக்கான பணப்பட்டுவாடாவை, அவர்களது இல்லத்தில் சென்று சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்தில் தபால்காரர்கள் தங்களது உயிரினையும் பொருட்படுத்தாது உயிர்காக்கும் மருந்துகளை நாடெங்கும் வினியோகம் செய்தனர்.

எனவே, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த உலக தபால் தினம் தபால் உறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தபால் உறையில் ரூ.5 தபால் தலை ஒட்டப்பட்டு சிறப்பு முத்திரை இடப்பட்ட இந்த உரையின் விலை ரூ 50, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தபால் உரையை கோவை தபால் நிலையம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஊட்டி, பொள்ளாச்சி, சேலம், சூரமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பத்தூர் உள்ளிட்ட தலைமை தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம், என அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குனர்கள் கோபாலன், கலைச்செல்வி, உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....