கோவை: கோவை கோட்டைப்புதூர், காந்திநகர் பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை நா. கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை சுமார் 5 லட்சம் வாக்காளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாவட்டத்தில் 29 லட்சத்து 23 ஆயிரத்து 837 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் அடையாள எண் ஒவ்வொரு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளிலும் ஒரே விதமாக எண் இருக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் 5.20 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் டின் என்று ஆரம்பித்து அதனுடன் 8 இலக்க எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்பின் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 8 இலக்க ண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 7 இலக்க எண்களுடன் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அனைத்து அட்டைகளிலும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 7 இலக்க எண்களுடன் கூடிய திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் பழைய முறையில் அடையாள எண் கொண்ட 5 லட்சம் வாக்காளர்களுக்கு இதுவரை திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் புதிய எண்ணுடன், பழைய எண்ணும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்தனர்.