திருப்பூர்: பல்லடம் அருகே 4 வயது சிறுவன் விளையாடி கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் ஜான் விக்டர். இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு 4 வயதில் கவின்குமார் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வசந்தியின் தாயார் ஈஸ்வரி கவின்குமாரை தான் பணிபுரியும் சேடபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஈஸ்வரி பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, கவின்குமார் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் பொழுது கவின்குமாரை காணவில்லை.
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவின்குமாரை தேடினர். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் கவின்குமார் விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர், அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.