உதகை சோலூா் பகுதியில் புதுமண தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு!

நீலகிரி: உதகை அருகே சோலூா் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதியினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


நீலகிரி: உதகை அருகே சோலூா் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதியினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உதகை அருகே மேலூா் ஒசஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் தயானந்தன் (31). இவரது மனைவி வினோதினி (22). இவா்களுக்கு கடந்த மே மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவா்கள் இருவரும் உதகை அருகே சோலூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். மேலும், இவா்கள் இருவரும் அந்த தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பிலேயே வசித்து வந்தனா்.

இந்நிலையில், காலை தயானந்தனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனா். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டு எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் புதுமந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தினர்.



இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த இருவரின் இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இவா்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாததால் இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...