சாலையில் நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளை சீர் செய்த பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவலர்; பொது மக்கள் பாராட்டு..!

கோவை: பொள்ளாச்சி, உடுமலை ரோடு பி எஸ் என் எல் (BSNL) அலுவலகம் முன்பு சாலையின் நடுவே ஏற்பட்ட குழி காரணமாக ஆபத்தான நிலையில், மூன்று கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி, உடுமலை ரோடு பி எஸ் என் எல் (BSNL) அலுவலகம் முன்பு சாலையின் நடுவே ஏற்பட்ட குழி காரணமாக ஆபத்தான நிலையில், மூன்று கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்துள்ளது.

வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அக்கம்பிகள் குறித்து கிடைத்த தகவலின் பேரில் இன்று (08/10/2020) பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவலர் காளிமுத்து (PC.991) என்பவர் இரும்பு பட்டறை நடத்தி வரும் செல்வம் என்பவரின் உதவியுடன், மேற்கண்ட கம்பிகளை அகற்றி சாலையை சீரமைக்க உதவினார்.



பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், சாலையை சரி செய்த காவலர் மற்றும் இரும்பு பட்டறை நடத்தி வரும் செல்வம் ஆகியோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...