நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையில் புகாரை பதிவு செய்த காவலர் இன்று சாட்சியம் அளித்தார். விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி வடமலை உத்தரவு பிறப்பித்தார்.
நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையில் புகாரை பதிவு செய்த காவலர் இன்று சாட்சியம் அளித்தார். விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி வடமலை உத்தரவு பிறப்பித்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரும் ஆஜராயினர்.
கொலை தொடர்பாக தகவல் அளித்த எஸ்டேட் காவலர், கிருஷ்ண தாபாவிடம் புகாரை பதிவு செய்த காவலர் ரிச்சர்டு ஜேக்கப் சாட்சியம் அளித்தார். கோத்தகிரியை சேர்ந்த செல்வராஜ் உட்பட நான்கு பேரும் சாட்சியளித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, வழக்கை வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.