அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து இருக்கும் - பொள்ளாச்சியில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி

கோவை: முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து இருக்கும், என பொள்ளாச்சியில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி.



கோவை: முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து இருக்கும், என பொள்ளாச்சியில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட திருத்தம் குறித்து, விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், உழவர் உற்பத்தி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது.



பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவில், வியாபாரிகளிடம் விவசாயிகள் ஏமாறாமல் இருக்க, மூன்று கட்ட பாதுகாப்பு உள்ளது, என்றார்.

மேலும், பாதுகாப்பு குழுவில், நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், நீதித் துறை சார்ந்தவர்கள் உள்ளார்கள். இத்திட்டம், தொடர்பான புகார்களை விவசாயிகள், அவர்களிடம் தெரிவித்து கொள்ளலாம், என்றும் தெரிவித்தார்.

சமீபகாலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தோலில் பச்சை துண்டு போட்டு வயல்வெளிகளில் ஷூட்டிங் நடத்தி கொண்டு தன்னை விவசாயியாக காட்டிக் கொள்கிறார் என்றும், விளைநிலத்தில் விதைகள் போட்டு விவசாயம் செய்து விவசாயியாக தன்னை மு.க ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், புதிய வேளாண் சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக விவசாயிகளிடையே தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

அரசியல் ஆதாயத்திற்காக பொய் பிரச்சாரம் செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் முயற்சியில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபடுவதாகவும், அப்போது தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக. வை பொருத்தவரை, தேசிய தலைமை அறிவித்த கூட்டணி, தமிழகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது, மீண்டும் கூட்டணி குறித்து தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்தும் வரை இதே நிலை தான் தொடரும் என்றும், தேர்தல் நேரங்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பது, அதிமுகவின் உட்க்கட்சி விவகாரம், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து இருக்கிறது, என்று ஜி.கே.நாகராஜ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...