நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களை நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது.
நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களை நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது.
மலை மாவட்டமான நீலகிரியில் வாழும் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ புகார் கொடுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை சார்பில் வீடுகளுக்கே சென்று விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியினை மாவட்ட காவல்துறை துவக்கியது.
இதன் முதற்கட்டமாக குன்னூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் மற்றும் வெலிங்டன் காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அளித்துள்ள புகார்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளும் பணியினை துவங்கியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.