திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்திற்கு குடிபுகுந்த 75 ஆண்டுகால அரசமரம்..!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 75 ஆண்டுகால அரசமரம் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 75 ஆண்டுகால அரசமரம் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் நோக்கிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பணிகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 ஆண்டுகள் பழமைமிக்க அரசமரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

ஆனால், இவ்வளவு பழமைவாய்ந்த அரச மரத்தை வெட்டாமல் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட திருப்பூரை சேர்ந்த ஸ்கிரீன் அண்ட் கிளீன் அமைப்பு நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை வெட்டாமல் வேறு இடத்தில் நடுவதற்கு அனுமதி வாங்கினர்.



இதையடுத்து, 16 அடி அகலம், 85 மீட்டர் உயரம் உள்ள அந்த அரசமரத்தின் ஆணி வேர் தவிர கிளைகள், பக்கவாட்டு வேர்கள் வெட்டப்பட்டது. அவற்றில் வேர் வளர்ச்சி ஊக்க மருந்து தடவப்பட்டது. பிறகு மரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு சில நாட்களுக்கு பின்னர் புதிய கிளைகள் துளிர்விடத் துவங்கின.

இந்த நிலையில், மரம் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு இன்று இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் மரம் வேருடன் பிடுங்கப்பட்டது.



இதையடுத்து, ராட்சத சரக்கு லாரி உதவியுடன் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வேருடன் பிடுங்கப்பட்ட 15 டன் எடை கொண்ட அந்த அரசமரம் லாரியில் ஏற்றப்பட்டது.

பின்னர், அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளம்பளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் மறுநடவு செய்யப்பட்டது. மரம் நடவு செய்யப்படும் இடத்தில் 12 அடி ஆழத்திலும், 16 அடி அகலத்திலும் குழி தோண்டப்பட்டு, அதில் மரத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் இடப்பட்டு மரம் நடவு செய்யப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...