கோவை சாடிவயல் அருகே விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி..!

கோவை: கோவை சாடிவயல் அருகே விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கு நடவு செய்யும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை சாடிவயல் அடுத்த கல்குத்திபதி கிராமத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அங்கு நடவு செய்யும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மத்திய மாநில அரசுகளின் சலுகைகளுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, சாடிவயல் அடுத்த கல்குத்திபதி கிராமத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அங்கு நடவு செய்யும் பயிர் வகைகள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அத்தனை தேவைகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...