கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று மெக்ரிக்கா சாலையில்‌ தூய்மைப் பணியாளா்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று மக்கும்‌, மக்கா குப்பைகளை சேகரித்து வாகனங்கள்‌ மூலம்‌ கொண்டு செல்லும்‌ பணிகளை பார்வையிட்டார்.



பின்னர், அப்பகுதியில்‌ உள்ளவர்களிடம்‌ தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து சேகரித்து வழங்கும்படியும்‌, குப்பைகளை குப்பைத்தொட்டிகளில்‌ மட்டுமே கொட்ட வேண்டும்‌, சாலை ஓரங்களில்‌ கொட்டக்கூடாது என அப்பகுதியில்‌ உள்ளவர்களிடம்‌ தெரிவித்த ஆணையர் அவர்கள்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ ஆரோக்கியசாமி சாலையில்‌ மக்கும்‌ கழிவுகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்டார்.



மேலும், அம்மையம்‌ செயல்படுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும்‌ செய்திட வேண்டுமென தொடர்புடைய அலுவலா்களுக்கு தெரிவித்த பின்னர், ஆர்‌.எஸ்‌.புரம்‌ சீனிவாச ராகவன்‌ வீதியில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளையும்‌, அப்பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌ நேரில்‌ பார்வையிட்டு அப்பகுதியில்‌ உள்ளவர்களிடம்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌ எனவும்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்‌ தெரிவித்த ஆணையாளர்‌ அவர்கள்‌, தொடர்ந்து ஆர்‌.எஸ்‌.புரத்தில்‌ கொரோனா பரவுதலின்‌ காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நவீன மயமாக்கப்பட்ட காந்தி பூங்காவை பார்வையிட்டு அப்பூங்காவைச்‌ சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்தார்.



அதனைத்‌ தொடர்ந்து, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பாஷியகார்லூ வீதியில்‌ சுகாதார பணியாளர்கள்‌ வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌ பரிசோதனை செய்யப்படுவதையும்‌, வெப்பமானியைக்‌ கொண்டு உடல்‌ வெப்ப பரிசோதனை செய்யப்படும்‌ பணிகளையும்‌ பார்வையிட்டு, கொரோனா தொற்று உள்ளவர்களின்‌ விபரங்கள்‌ பதிவேடுகளில்‌ முறையாக பதியப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதியில்‌ இருந்தவர்களிடம்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌, சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளைக்‌ கழுவ வேண்டும்‌. நோய்‌ தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு தந்து நல்கிட வேண்டும்‌ என அப்பகுதியில்‌ உள்ள பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.



இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ அ.ஜெ.செந்தில்‌அரசன்‌, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, பணிமேற்பார்வையாளா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...