கோவை: கோவை காங்கேயம் பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் என்பவரது மகன் ரமேஷ். இன்று சூலூரில் இருந்து காரணம்பேட்டை சென்று கொண்டு இருந்த போது, காங்கேயம் பாளையம் என்ற இடத்தில் காவல்துறை தடுப்பை தாண்டி செல்லும் போது, எதிர்பாராத விதமாக அரசுப்பேருந்து இவரது இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த சூலூர் போக்குவரத்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.