கோவை செல்வபுரம் அருகே கேமராவை திருடிச் சென்ற நபரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை!

கோவை: கோவை செல்வபுரம் அருகே கேமராவை திருடிச் சென்ற நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் அருகே கேமராவை திருடிச் சென்ற நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை செல்வபுரம் சாவித்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (22). திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ, வீடியோ ஒளிப்பதிவு செய்து வரும் இவர், தனது வீட்டின் அருகே ஸ்டுடியோ வைத்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி இவரது ஸ்டுடியோவில் இருந்த கேனான் கேமராவை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் திருடி சென்றார்.

பின்னர் இதுகுறித்து சூரியபிரகாஷ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனிடையே, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கேமரா திருப்பூர் பகுதியில் இருப்பதும், கேமராவை திருடிச் சென்றது நெல்லையைச் சேர்ந்த ரிஷ்வன் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்து கேமராவை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...