திருப்பூர்: திருப்பூரில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் 8 மாத காலமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காத நிலையில், உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், கடந்த 8 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காமல் இருந்தது.

இந்நிலையில், விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த இயலாத சூழ்நிலையில் இருப்பதாகவும், இதனால் அதிக அளவு லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகள் நடப்பதாகவும் இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், ஒரு வருட காலமாக காங்கேயத்தில் செயல்பட்டு வரும் கரி தொட்டி தொழிற்சாலையை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாததை சுட்டிக் காட்டி வரும் நவம்பர் 2-ம் தேதி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.