கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே கருகிய நிலையில் பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (50). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா(43). இத்தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கார்த்திகா கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் தனது கணவரை தன்னுடன் இருக்க அனுமதிக்காமல் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மருத்துவர் விஜயகுமார் மனைவியை பார்த்துவிட்டு சென்றவர் மருத்துவமனையிலேயே தங்கி உள்ளார். நேற்று கார்த்திகாவின் சகோதரி வாசுமதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது கார்த்திகாவின் அலைபேசி ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த வாசுமதி மாலை 7.30 மணியளவில் கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உட்புறமாக தாளிடப்பட்டு இருப்பதை கண்ட அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் எரிந்த நிலையில் கார்த்திகாவின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததின் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தீ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.