கோவை: கோவை மாநகரத்திற்கு வளம் சேர்ப்பவை பரந்த விரிந்த மலைகளும், பசுமையாக விளங்கும் குளங்களும் ஆறுகளும் தான். காவிரிக்கு அடுத்தபடியாக பல சோழ மன்னர்கள் வியந்து பார்த்த ஆறு என்றால் நொய்யல் ஆற்றை சொல்லாம். கடந்த 700 ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கற்களையும், மண்ணையும் வைத்து ஆற்றங்கரையில் உள்ள குளங்களை பலப்படுத்தி வந்துள்ளனர்.

ஆகையால், குளக்கரையில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட தாவரங்களும், பட்டாம் பூச்சிகளும், நீர் வாழ் பறவைகளும், ஊர்வனங்களும் தங்களுக்கான வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்து வந்தன. கண்ணுக்கு தெரிந்த சில காலமாக இயற்கைக்கு எதிராக ஆறு மற்றும் குளங்கள் புனரமைப்பு என்றும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரிலும் நூற்றுக்கணக்கான கோடி செலவில் மக்களின் வரி பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் பெய்த மழையே சாட்சி எனலாம். இதை விட கண்ணுக்கு தெரியாத பல சீர்கேடுகளை விளைவிக்கும் செயல்களை செய்து நொய்யலை வீணாக்கி வருகிறார்கள்.
நொய்யல் ஆற்றில் தாதுப் பொருட்களை பற்றி அண்மையில் பாரதியார் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றினை நடத்தியது.அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான கன உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் டி.முரளி சங்கர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் முனியசாமி, ஆராய்ச்சி மாணவி காயத்ரி, பாரதி தாசன் பல்கலைக்கழக கடல் சார் அறிவியல் துறை பேராசிரியர்கள் R.ராஜராம், P.சந்தானம் ஆகியோர் கொண்ட குழு நொய்யல் ஆற்றின் நீர் மாதிரிகள், நண்டுகள், அதில் உள்ள தாவரங்கள் என எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேதியல் பொருட்கள், கனிம உலோகங்கள் அதிகளவு இருப்பது கண்டறிந்துள்ளனர். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தரத்தின்படி ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 மில்லிகிராம் துத்தநாகம் இருக்க வேண்டும்.
ஆனால், ஆற்றுத்தண்ணீரில் 2.75 மில்லி கிராம் இருக்கிறது. மேலும் 0.05 மி.கி இருக்க வேண்டிய காரியம் 10.74 மில்லிகிராமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், இந்திய தர நிர்ணய அமைப்பான BIS வின் படி 250 மி.கி இருக்க வேண்டிய குளோரைடு 1,010 மில்லி கிராமும், 45 மி.கி இருக்க வேண்டிய நைட்ரேட் 250 மி.கிராமும், 200 மி.கி இருக்க வேண்டிய நீரின் கடின தன்மை 1075 மி.கிராமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆற்றில் கலந்துள்ள அதிகளவு உலோகத்தன்மையால் அதில் வாழும் உயிரினங்களுக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என ஆய்வு செய்த போது நண்டுகளை பரிசோதனைக்காக எடுத்தனர். FAO தரத்தின்படி 1 கிலோ கிராமில் 30 மி.கி இருக்க வேண்டிய துத்தநாகம் 51.72 ஆக இருக்கிறது. 0.05 ஆக இருக்க வேண்டிய காட்மியம் 0.22 மி.கிராமாக இருக்கிறது. மேலும், அவற்றை தீவிர ஆய்வு செய்ததில் 0.5 மி.கி இருக்க வேண்டிய காரிய என்ற உலோக தன்மை 19.91 மில்லி கிராமும் இருக்கிறது. இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக ஆற்று நீரில் சாய கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் திறந்துவிடப்படுவதே முக்கிய காரணம் ஆகும்.
இந்த ஆய்வுகள் 3 காலநிலை இடைவெளியில் எடுக்கப்பட்டவை ஆகும். இதே போல், பல்வேறு காலங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தினால் தெளிவான முடிவுகள் கிடைக்கப் பெறும் என்கின்றனர் ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள்.
நொய்யல் பிறந்தது முதல் தடுப்பணை வரை சுத்தமாகவும், குடிப்பதற்கு ஏற்றவையாக இருக்கிறது. அதன் பின் வரும் செல்வபுரம், புட்டுவிக்கி, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை போன்ற இடங்களில் ப்ளீச்சிங் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் கழிவுகளை பெரும்பாலும் நொய்யல் ஆற்றில் தான் கலந்து விடுகிறார்கள். அதில் உள்ள கடின உலோகங்கள் ஆற்று நீரால் அடித்துச் செல்லப்படுகிறது.
எனவே, கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுவோரை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்றிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் இயற்கைக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவது ஆபத்தையே விளைவிக்கும்.