கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது - 2.25 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, வடவள்ளி போலீசார் வீரகேரளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, விற்பனைக்கு கஞ்சா வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததை அடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பீடம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...