தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது - வானதி சீனிவாசன், பாஜக துணை தலைவர்

கோவை: தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது என்று கோவையில் பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


கோவை: தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது என்று கோவையில் பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



கோவையில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேல் ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மக்கள் சேவை மையத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் அக்கட்சியின் துணை தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, பா.ஜ.க ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது எனவும் தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது என்றவர், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் வலுவாக இருக்கின்றது எனவும் அரசியலில் வருங்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை சொல்ல முடியாது எனவும் அதைதான் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது வரை தொடர்கின்றது எனவும் கூட்டணியில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்று கூறிய அவர், வரக்கூடிய காலத்தை காலம்தான் முடிவு செய்யும் எனவும் இன்றைய தேதியில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார்.

புதியதாக கட்சி ஆரம்பிக்க உள்ளவர்கள், ஆரம்பித்தவர்கள் அவர்களுடன் கூட்டணி வரலாம் என கூறிய அவர், அரசியல் பரபரப்பிற்காக பொன்.ராதாகிருஷ்ணன் எதுவும் சொல்லவில்லை எனவும் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது எனவும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்பதை எங்களின் தேசிய தலைமை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல, தேசிய தலைமை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்றோம் எனவும் இது குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்று கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளர் என அதிமுக கட்சியினர் முடிவெடுத்து இருக்கின்றனர். அது அந்த கட்சியின் முடிவு. இது குறித்து எங்கள் தேசிய கட்சியின் தலைவர்கள் கலந்து பேசி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பார்கள் எனவும் பா.ஜ.க தலைமையில் கூட கூட்டணி அமையலாம் எனவும் கூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும் என பா.ஜ.க துணைத்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...