கோவை: பெண்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்திட வேண்டும் என கோவையில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலன் ஹத்ராஸ் மாவடத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர் மீது தாக்குதல் நடைபெற்றதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பெண்ணின் உடல் உறவினர்களிடம் கூட ஒப்படைக்கப்படாமல் எரிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறையினரை கண்டித்து பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தபெதிக, திவிக, திராவிடர் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் உத்திரபிரதேச மாநில பாஜக அரசை கலைக்க வேண்டுமெனவும், பெண்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.