கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை காரமடை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்(60). இவர் தனது நண்பர் கதிரவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுபாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
இந்நிலையில், காரமடை அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் சிவராஜ் தடுமாறிக் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் உயிரிழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, கோவை கருமத்தம்பட்டி அடுத்த கோரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்(22). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டியில் இருந்து கிட்டாம்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் ஜலூய்(37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பூ மார்க்கெட் அருகே சென்று கொண்டு இருந்த போது தவறான பாதையில் எதிரே வந்த மினி வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.