கோவையில் சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.









கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் ராம் நகரில் சோடா கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான நிதீஷ்குமாரை, ராம் நகரைச் சோ்ந்த சிலா் கத்தியால் குத்தினா். இதையடுத்து, நிதீஷ்குமாா் மீதான தாக்குதலுக்கு பிஜு தான் காரணம் என நினைத்த, அவரது ஆதரவாளா்கள் அவரைக் வெட்டிக் கொலை செய்தனா். 

இது குறித்து காட்டூா் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அருண் பிரசாத், விவேக் பிரபு, இளையராஜா, அரவிந்த், பிரவீன், கார்த்திக், ஆறுமுகம், கோபால், சக்தி பாண்டி, பிரகாஷ் ஆகிய 10 பேரைக் கைது செய்தனா்.

மேலும், வழக்கின் முக்கிய எதிரியான ஆறுமுகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதனையடுத்து, ஆறுமுகத்தை நான்கு நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 



இந்நிலையில் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குற்றவாளிகளில் ராஜா, அருண் பிரசாத், அரவிந்த், விவேக் பிரபு ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

இதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் காவல்துறையினர் இன்று வழங்கினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...