கோவையில் தென்மேற்கு பருவமழை 296 மி.மீ. பதிவு; இம்மாதம் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கோவை: கோவையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 296 மி.மீ. அளவுக்கு பெய்துள்ளது, என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 296 மி.மீ. அளவுக்கு பெய்துள்ளது, என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக, நொய்யலில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், நரசம்பதி, பேரூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பின. மேலும், கோவையின் முக்கிய குடிநீர் ஆதரமான சிறுவாணி அணையின் நீர்மட்டமும் 40 அடிக்கு மேல் உயர்ந்து காணப்பட்டது.

இது குறித்து வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் ராமநாதன் கூறுகையில், ‘‘கோவையில் ஜூன் மாதம் 22.5 மி.மீ. மழையும், ஜூலை மாதம் 83.5 மி.மீ. மழையும், ஆகஸ்ட் மாதம் 49.5 மி.மீ. மழையும், கடந்த செப்டம்பர் மாதம் 140.5 மி.மீ. மழையும் என மொத்தம் 296 மி.மீ. தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. கோவையில் வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்கவில்லை. இம்மாதம் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு சராசரி அளவிற்கு வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...