கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் காலியாக இருக்கும் வீடுகளை இடிக்கும் பணிகளை, மாநகராட்சி இன்று முதல் மீண்டும் துவங்கியது.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்து வந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்த, அக்குளக்கரையில் இருந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வந்தது.
மேலும், அங்கு வசித்து வந்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டுள்ளன. இதில், சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டது.
அதன் பின், தற்போது அங்கு காலியாக உள்ள 400 மேற்பட்ட வீடுகளை ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "முத்தண்ணன் குளத்தில் காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. வரும் சனிக்கிழமைக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.