கோவையில் குடிநீர்‌ விநியோகம்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌, மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகளையும்‌ துரிதமாகவும்‌, தரமானதாகவும்‌ முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர்‌ வழங்கும்‌ பணிகளையும்‌, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல்‌ சாலைகள்‌ செப்பனிடும்‌ பணிகளையும்‌ உடனுக்குடன்‌ மேற்கொள்ளுமாறும்‌, தூய்மைப்‌ பணிகளை சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ தொய்வின்றி மேற்கொள்ள வேண்டுமெனவும்‌ சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.



இதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.93 மணிகண்டன்‌ நகர்‌ மற்றும்‌ வார்டு எண்‌.97 காமராஜ்‌ நகர்‌, எம்‌.ஜி.ஆர்‌. நகர்‌, கோவைப்புதூர்‌ 4-பிளாக்‌, வார்டு எண்‌.90 சிறுவாணி நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ பாதாள சாக்கடை அமைக்கும்‌ பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில்‌ பழுதடைந்த குடிநீர்‌ குழாய்களை சீரமைத்து சரிசெய்யும்‌ பணிகள்‌ மற்றும்‌ சாலைப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ டி.ஆர்‌.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேற்பார்வை பொறியாளர்‌ ரகுபதி, தமிழ்நாடு குடிநா வடிகால்‌ வாரிய நிர்வாகப்‌ பொறியாளர்‌ லட்சுமணன்‌, குடிநீர் வடிகால்‌ வாரிய ஆலோசகா்‌ எஸ்‌.சம்பத்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌, மற்றும்‌ செயற்பொறியாளா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...