கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் என அரசின் விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து மாநகராட்சி சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து ரூ.35 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு பலகைகள் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன் அரசு கூறியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,’’ என்று தெரிவித்தனர்.