கோவை: கோவை தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக மண் அள்ளி சென்ற 4 டிப்பர் லாரியையும், ஒரு ஜேசிபி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையாம் பாளையம், no.24.வீரபாண்டி போன்ற ஊர்களில் அனுமதியின்றி HACA நிலத்திலும், புறம்போக்கு இடங்களில் செங்கல் சூலைகள் இயங்கி வருகின்றது.
கடந்த இரு நாட்களாக சட்டவிரோதமாக தொடர்ந்து செம்மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில், வடக்கு தாசில்தார் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகளின் தலைமையில் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, தடாகம் சாலை வழியாக சட்டவிரோதமாக செம்மண் அள்ளி சென்ற 4 டிப்பர் லாரியையும், ஒரு JCB வாகனத்தையும் மடக்கி பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஓட்டுநர்கள் கைது செய்தும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக டிப்பர் லாரிகளில் விதியை மீறி செம்மண் அள்ளி சென்றவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
கடந்த மாதமும் 24 வீரபாண்டி ஊராட்சி மற்றும் மாங்கரை பகுதியில் கனிம வளம் திருடுவது குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கனிம திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள், JCB வாகனத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்களிலும் கூட சட்டவிரோதமாக மண் அள்ளுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஊர் மக்கள் எத்தனையோ முறை செம்மண் ஏற்றி வந்த லாரியை கையும் களவுமாக பிடித்திருந்த நிலையில், மீண்டும் கனிம வள கொள்ளையர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயற்கை வளமும், மலைகளில் வாழும் வன உயிரிகளும் அதனை சார்ந்து வாழும் மனிதர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில், செங்கல் சூலைகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
மேலும், சட்ட விரோதமாக செம்மண் அள்ளுவதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு வாழும் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.