பொள்ளாச்சி நகரில் குற்றச்சம்பவத்தை கட்டுப்படுத்த, ஜோதிநகரில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

கோவை: பொள்ளாச்சி நகரில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்வங்களை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களே முன்வந்து தங்கள் பகுதிகளில் சிசிடிசி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகரில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்வங்களை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களே முன்வந்து தங்கள் பகுதிகளில் சிசிடிசி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், நகர் பகுதிகளில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில், குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜோதிநகரில், திருட்டு சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பது மட்டுமின்றி, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், பொதுமக்களே முன்வந்து ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதிலும், ஜோதிநகர் டி காலனி மற்றும் எம்கே வீதியில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 6 கேமராக்கள் அமைக்கப்பட்டன. அந்த கேமராக்களின் செயல்பாடு துவக்க விழா நேற்று நடைபெற்றது.



இதற்கு, டிஎஸ்பி, சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், கோவை மத்திய கூட்டுறவு சங்க தலைவர், கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு, கேமராக்களின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். சிசிடிவி கேமரா பொருத்துவது மட்டுமின்றி, அதை முறையாக பராமரித்து குற்ற சம்பவங்களை கண்காணிக்க, காவல்துறைக்கு பொதுமக்கள், உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...