பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது

கோவை: பொள்ளாச்சி, ஆழியாறு அணையிலிருந்து 22 ஆயிரத்து 116 ஏக்கர் பாசன பரப்புள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்பகுதி விவசாயிகள், மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி, ஆழியாறு அணையிலிருந்து 22 ஆயிரத்து 116 ஏக்கர் பாசன பரப்புள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்பகுதி விவசாயிகள், மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள், ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி, ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, இன்று பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு, அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை வரவேற்கும் விதமாக, மலர்கள் தூவி வரவேற்றனர்.



ஆழியார் அணையிலிருந்து பொள்ளாச்சி, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் ஆகிய கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் 22 ஆயிரத்து 116 ஏக்கர் பாசனம் பெறும், மேலும் 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு 80 நாட்களுக்கு 2,548 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படும் என்றும், இந்தத் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...