கோவை ஆத்து பொள்ளாச்சி அருகே வாங்கிய கடனை திருப்பி தர முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை!

கோவை: கோவை ஆத்து பொள்ளாச்சி அருகே வாங்கிய கடனை திருப்பி தர முடியாத காரணமாக விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஆத்து பொள்ளாச்சி அருகே வாங்கிய கடனை திருப்பி தர முடியாத காரணமாக விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்து ஆத்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(46). விவசாயம் செய்து வரும் அவர் தேங்காய் வியாபாரமும் செய்து வந்து உள்ளார். கடந்த சில மாதமாக தொழில் நஷ்டம் ஏற்படவே உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார்.

இதனிடையே, வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் திருப்பி தர முடியாததின் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் தேங்காய் குடோன் சென்றவர் பூச்சி மருந்து குடித்ததில் மயங்கி விழுந்துள்ளார். குடோனுக்கு சென்ற சக்திவேல் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சக்திவேல் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...