கோவை: பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், கடந்த ஆறு மாத காலமாக சி.டி.ஸ்கேன் பழுது பார்க்கப்படாமல் உள்ளதால், தனியார் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், கடந்த ஆறு மாத காலமாக சி.டி.ஸ்கேன் பழுது பார்க்கப்படாமல் உள்ளதால், தனியார் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையானது, தாலுக்கா மருத்துவமனையில் இருந்து மாவாட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துகடவு., உள்ளிட்ட பகுதிகளை சுற்றி உள்ள கிராம மக்கள் இந்த பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆறு மாதமாக செயல்படாத சிடி ஸ்கேன் எந்திரம்

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் உள்ள சி.டி.,ஸ்கேன் செய்யக்கூடிய இயந்திரம் பழுதானது. தற்போது வரை, ஏழு மாதங்கள் ஆகியும் அந்த ஸ்கேன் இயந்திரம் பழுது பார்க்காமல் நடைமுறைக்கு வராததால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஸ்கேன் செய்வதற்காக, தனியார் ஸ்கேன் சென்டரில் அதிக பணம் செலுத்தி ஸ்கேன் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அறுவை சிகிச்சை செய்வதில் தொய்வு
மேலும், இந்த தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதில் அறுவை சிகிச்சைக்கென, பல நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நான்கு அறுவை சிகிச்சை மையங்கள் கொண்ட தலைமை அரசு மருத்துவமனையில், தற்போது கொரோனா பேரிடர் காலம் என்பதால் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை, எனவும் புகார் எழுந்துள்ளன.

சராசரியாக ஒரு நாளைக்கு 10 அறுவை சிகிச்சை செய்து வந்த பொள்ளாச்சி அரசு மருத்துவர்கள், தற்போது பிரசவதிற்கான அறுவை சிகிச்சை மட்டுமே செய்வதாகவும், மற்ற அறுவை சிகிச்சைகள் செய்வதில்லை, என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடனடி தீர்வு கோரும் பொதுமக்கள்
இதனால், பல ஆயிரக்கணக்கில் தனியார் மருத்துவமனையில் பணம் செலவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கூடிய விரைவில் புதிய ஸ்கேன் இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைகளும் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.