கோவை: கோவை அடுத்த நல்லம்பாளையம், சுப்பண்ண கவுண்டர் லே-அவுட் பகுதியை சேர்ந்த அவிநாசியப்பன் என்பவரது மகன் ராமதாஸ் (45).

நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொன்மணி திருமண மண்டபத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல், திருமண மண்டப வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு சுமார் 51 லட்சம் ரூபாய் அளவுக்கு கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருமண மண்டப உரிமையாளர் சுரேஷ்குமார் (30) தங்களது நிறுவன மேலாளர் ராமதாஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,11358 ரூபாய் கையாடல் செய்ததாக, கடந்த மார்ச் மாதம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், மேலாளர் ராமதாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.