கோவை: கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இராமசாமி(66) என்பவர் கழிவறையில் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை எடுத்து செல்ல ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கொடிசியா வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் மருந்துகள், கபசுர குடிநீர் உள்ளிட்ட முறையான எந்த வசதிகளும் இல்லாமலும், போதுமான மருத்துவர்கள் இல்லாமல் அவதியடைந்து வருவதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் போது, தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தங்களை அழைத்து வரும் அதிகாரிகள் நோயாளிகளை அழைக்கழிப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, நோயாளிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.