கோவையில் மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தவிர்த்து 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தவிர்த்து 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் பேர் வரை பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தற்போது, கோவையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஏற்ப சிகிச்சை வசதிகளை அதிகரிக்கும் வகையில், கீழ்கண்ட புதிய

மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1. சாய்பாபா காலனி, கே.டி.வி.ஆர் மருத்துவமனை

2. குனியமுத்தூர் கே.ஜெ. மருத்துவமனை

3. துடியலூர், உமா நர்சிங் ஹோம்

4. அன்னூர் என்.எம். மருத்துவமனை

5. சின்னியம்பாளையம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை

6. ராமநாதபுரம், லியோ ஆர்தோ கேர் மருத்துவமனை.

இந்த மருத்துவமனைகளில் மொத்தம் 226 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், ‘‘கோவையில் கூடுதலாக 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், தற்போது அரசு மருத்துவமனைகளில் 1,305 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 1,539 படுக்கைகள் சேர்த்து 5 ஆயிரத்து 206 படுக்கை வசதிகள் பயன்பாட்டில் உள்ளன."

மேலும், இது தவிர அரசு மருத்துவமனைகளில் 1,519 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 5,586 படுக்கைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 467 படுக்கை வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன, என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...