கோவை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொள்ளாச்சி சுகாதாரத்துறை சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையர் காந்திராஜ், தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், ஸ்ரீதேவி மற்றும் நகர்நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமை வகித்து பேசும்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் தீவிர நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பாசிடிவ் என்று தெரிந்ததும் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் வெளியூர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பரிசோதனை செய்ய செல்லும்போது, பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பட்டியலில் வருகிறது. இதற்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நபர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்வதால் குழப்பம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வருபவர்களுக்கு நகராட்சி சுகாதார துறை மூலமாக பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்படும். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வருபவர்களை தேர்வு செய்யப்படும் இடத்திற்கு, தனியார் மருத்துவமனை அனுப்ப வேண்டும். இதனால் குழப்பம், பரிசோதனை முடிவுகள் தாமதமாவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார்.