வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்தி சென்ற இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பூரில் சிவசேனா கட்சியினர் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்தி சென்ற இரண்டு லாரிகளை சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்தி சென்ற இரண்டு லாரிகளை சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் கொச்சி நகரங்களுக்கு மாடுகளை கடத்திச் சென்ற இரண்டு லாரிகளை திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி மற்றும் பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆந்திராவிலிருந்து 29 மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், ஹரியானாவில் இருந்து 38 மாடுகளை ஏற்றுக்கொண்டும் ஒரு லாரியும் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், வாகன ஓட்டிகள் இருவர் மீதும் பசுவதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...