கோவை போத்தனூர் அருகே அரிசி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி செய்த நபர் கைது - மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவை போத்தனூர் அருகே அரிசி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் அருகே அரிசி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பீமா நகரை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது தமீமுன் அன்சாரி (39). இவர் திருச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு கோவையை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சலீம் என்ற இருவர் இணையதளம் மூலமாக முகமது தமீமுன் அன்சாரியை அணுகி, கோவை போத்தனூர் பகுதியில் தாங்கள் நடத்தி வரும் அரிசி மண்டிக்கு 21 டன் அரிசி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை நம்பி முன் பணம் எதுவும் பெறாமல் சுமார் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 21 டன் அரிசி மூட்டைகளை தமீமுன் அன்சாரி அனுப்பி வைத்துள்ளார். அரிசியை பெற்றுக் கொண்டு தொடர்ந்து பணம் தராமல் அஷ்ரப் மற்றும் சலீம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரப்பை நேரில் சந்தித்து பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, முகமது தமீமுன் அன்சாரி போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அஷ்ரப் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அஷ்ரபை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவரது கூட்டாளியான சலீமை தேடி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...