கோவை: கோவை சூலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக குழந்தையை தாயிடம் இருந்து தூக்கி சென்ற தந்தையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(34). கடந்த சில வருடங்களுக்கு முன் கோவை சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, சூலூர் அடுத்து செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்த சரண்யா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு ஒன்பது வயதில் மகன் உள்ளார்.
இதனிடையே, கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கணவன் -மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை பிரிந்து சென்ற சரண்யா, செலகரிச்சல் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து கொண்டு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நரசிம்மனும் சரண்யாவும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மனைவியை சமாதானம் செய்ய அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருடன் சரண்யா வீட்டிற்கு சென்ற நரசிம்மன் தனது மகனை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு சரண்யா அனுமதி மறுக்க திடீரென நரசிம்மன் மற்றும் பிரவீன் சிறுவனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் சரண்யா மற்றும் அவரது பெற்றோரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர், இதுகுறித்து சரண்யா சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.