கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கோதவாடி என்ற மிகப்பழமையான குளம் ஒன்று அமைந்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கோதவாடி என்ற மிகப்பழமையான குளம் ஒன்று அமைந்துள்ளது. 80-களிலே மிகவும் நீர் நிறைந்த குளமாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவைக்கு குறிச்சி குளம் எப்படியோ அதுபோல பொள்ளாச்சி பகுதிக்கு கோதவாடி குளம் ஆகும். அதிகளவு நீர் கொள்ளளவு கொண்ட குளங்களில் இதுவும் ஒன்றாகும். காலங்கள் செல்ல போதிய மழைபொழிவு, நீர் ஆதாரம் இல்லாததால் வறண்டு, புதர் மண்டி கிடக்கிறது. அதன் நிர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இக்குளத்தை மீட்டு எடுக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று கூடி கோதவாடி குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என உருவாக்கி உள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ராஜன் அவர்களிடம் பேசிய போது, கௌசிகா நதி நீர் கரங்கள் குழுவின் உதவியுடன் முதன் முதலாக வாட்ஸ் ஆப் வாயிலாக தான் குழு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் மக்களும் வாராவாரம் களப்பணி செய்ய வர ஆரம்பித்தார்கள்.

முறைப்படியான தகவல் திரட்டுகள், கள ஆய்வுகள் மேற்கொண்டோம். சுமார் இருபது பஞ்சாயத்து அமைப்புகள் இந்த நிலை மூலம் பயன் பெற வாய்ப்புள்ளது. நீர் வழிப்பாதை ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த நீர் நிலைக்கும் அந்தந்தப் பகுதி மக்களை இணைத்து கள ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகள் செய்வதன் மூலம் அந்த நீர் நிலை தலைமுறைக்கும் தொடர்ந்து பாதுகாக்கப்படும். சுமார் 313 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
குளத்தின் பரப்பளவு குறித்து இன்னும் தெளிவு படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. தற்போது ஒரு பஞ்சாயத்து அமைப்பில் 136 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேலும் அங்குள்ள சீமை கருவேலம் மரங்கள் அகற்றப்பட்டு, கரைகளை பலப்படுத்தி வருகிறோம்.

இக்குளத்தினை பொறுத்தவரை கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடி கீழே சென்றுவிட்டது. ஒரு வேலை குளத்தினை பராமரிப்பு செய்து நீர் தேங்கினால் 30 முதல் 50 அடியிலேயே நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. கடந்த 3 முறை குளத்திற்கு அழியார், பரம்பிக்குளம் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் விட்டார்கள். கிட்டதட்ட 40 அடி வரை நிரம்பி சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கான தேவையை நிறைவேற்றியது.
மழைக்காலங்களில் ஓடைகள், நீர் வழித்தடங்கள் மூலமாக தான் குளத்திற்கு நீர் வருகிறது. சில காலமாக மழை பொய்த்து காணப்படுகிறது. இருக்கிற இடத்திலேயே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக செக்டேம்கள் அமைத்தார்கள். இதன் மூலம் முற்றிலும் குளத்திற்கு நீர்வரத்து நின்று போனது.
ஆழியார் அணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் போது ஆழியார்-பரம்பிக்குளம் பாசன வாய்க்கால் மூலம் நிரந்தர மடை அமைத்து குளத்திற்கு நீர் வருகிற மாதிரி செய்தால் 15 முதல் 20 நாட்களில் குளம் நிரம்பி விடும். இதன் மூலம் 3 முதல் 4 வருடங்களுக்கு விவசாயம், கால்நடை, தொழிற்சாலை என செழித்து காணப்படும். குளத்திற்கும், பாசன வாய்க்காலுக்கும் கிட்டத்தட்ட 2.1 கிலோ மீட்டர் தூரம் தான். இதனை கருத்தில் கொண்டு பொதுப் பணித்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இப்பகுதியில் வாழும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதன் மூலம் 40 கிராம பஞ்சாயத்தில் உள்ள 4 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்கிறார்.
மேலும், எங்களுடைய பிரதான கோரிக்கையான PAP வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வருவதும், அதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கு 40 பஞ்சாயத்துகள் இணைந்து ஒரு மித்த தீர்மானத்தை நிறைவேற்றி கோரிக்கையாக வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே தேர் நகரும், அதுபோல தான் ஊர்மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் குப்பைமேடும் கூட குளமாக மாற்ற முடியும்.