கோவை: கோவையில் அரசு பஸ் மோதியதில் பைக்கில் பயணம் செய்த தம்பதியினர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், கணவன் கண்முன்னே மனைவி, பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). இவரது மனைவி கோமதி (50). வீட்டிலேயே, கவரிங் நகை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இதற்க்கான, பொருட்களை வாங்க, இன்று கடைவீதி சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, எருக் கம்பனி அருகே வந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியில், பின்புறம் உட்கார்ந்து இருந்த கோமதி கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து துடியலூர் பேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.