நீலகிரியில் எஸ்டேட் தொழிலாளி அடித்துக் கொலை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, எஸ்டேட் தொழிலாளி செல்வராஜ் என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, எஸ்டேட் தொழிலாளி செல்வராஜ் என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் வசித்து வருபவர்கள் செல்வராஜ் (39 )மற்றும் ஆனந்த ராஜ் (42). இவர்கள், இங்குள்ள தனியார் எஸ்டேட் தொழிலாளர்களாக, வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையி்ல், செல்வராஜ் தனது மனைவி மாரியாயிடம் தகாத உறவு வைத்திருந்ததை கணவர் ஆனந்தராஜ் ஞாயிற்றுக் கிழமை கண்டித்துள்ளார், வாக்குவாதம் முற்றிப் போகவே, செல்வராஜை குடி போதையி்ல், ஆனந்தராஜ் பலமாக தாக்கியுள்ளார். இதில், வயிறு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட செல்வராஜ் திங்கள் கிழமை உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து கொலக்கம்பை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயமுருகன், இந்த வழக்கினை விசாரித்து, அதனை கொலை வழக்காக பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தார். 

மேலும், செல்வராஜின் உடன் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...