வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகையால் தீவிரமடையும் கொரோனா தொற்று - தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகையால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகையால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும் அவர்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.



இதனால் வால்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது இதனால் வால்பாறை பகுதியில் உள்ள நோயாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.



இதேபோல, வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையமும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உடல் பரிசோதனை செய்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எந்த சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்காக மூன்று மணி நேரம் மலைப்பாதை பயணம் செய்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனிடையே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தினால் வால்பாறைக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் கருத்தாகும்.

மேலும் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி வருவாய் துறை உயர் அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை நிறுத்தப்பட வேண்டும். கடந்த ஒரு மாத காலமாக பொதுப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியாளருக்கு அனைத்து அமைப்புகளால் மனு அளிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...